• கி. பி. 20ஆம் நூற்றாண்டளவில் இலங்கை பிரித்தானிய அரசாங்கத்pன்கீழ் ஒரு
முடிக்குரிய குடிறே;ற நாடாக் இருந்தது. அப்போதிருந்த இலங்கை ஆளுநர் நாட்டிலிருந்த
விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட விவசாய வங்கித் தொழிற்
குழுவின் விதப்புரையின்மீது அங்கீகரிக்கப்பட்ட தீர்வொன்றாக 1911ஆம் ஆண்டின் 07ஆம்
இலக்க கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின் நியதிகளின்படி கூட்டுறவுக் கடன் சங்கங்களைத்
தாபிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்..
• தொடக்கத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட 1911ஆம் ஆண்டின் கூட்டுறவுச் சங்கங்கள்
கட்டளைச் சட்டத்தின் நியதிகளின்படி பதிவாளருக்கு கூட்டுறவுச் சங்சங்களைப்
பதிவுசெய்வதற்கும் எவையேனும் வைபவங்களுக்குத் தலைமை தாங்குவுதற்கும்
தத்துவமளிக்கப்பட்டது. எனினும் ஒரு முழுநேரப் பதிவாளர் அவசியமில்லை என அரசாங்கம்
உணர்ந்தமையால் தொடக்கத்தில் மேற்படி கட்டளைச் சட்டத்தின்கீழ் பதிவாளருக்குப்
பொறுப்பிக்கப்பட்ட ஒருசில கடமைகளையும் பணிகளையும் அரசாங்க அதிபருக்குக் கையளிக்கத்
தீர்மானிக்கப்பட்டது. இவற்றுள் கூட்டுறவுச் சங்;;கங்களைப் பதிவுசெய்வதற்கான
விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்யும் கடமையும் அடங்கும். 1904ஆம் ஆண்டில் கிராமிய
சமுதாயத்தின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு இலங்கை விவசாயச் சங்கம் எனப்படும்
சங்கமொன்று இலங்கை ஆளுநரின்கீழ் தாபிக்கப்பட்டது. பிரசாரமும் கூட்டுறவுச் சங்கங்களை
மேம்படுத்தும் செயற்பாடுகளும் இச்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டன.
• 1911ஆம் ஆண்டில் இலங்கை விவசாயச் சங்கங்களுக்குப் பதிலாக விவசாயத் திணைக்களம்
தாபிக்கப்பட்டது. 1911ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் ஒரு குறுகிய தவணை
நடைமுறையாகும். பதிவுசெய்யும் வழமையான பணிகளுக்கு மேலதிகமாக இன்னும் பல பணிகள்
மேற்கொள்ளப்படவேண்டியிருந்தமையால் விவசாயத்துறை பணிப்பாளரை கூட்டுறவுச் சங்கங்களின்
பதிவாளராகவும் நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அதே ஆண்டில் கூட்டுறவுச்
சங்கங்களால் சமர்ப்பிக்கப்பட்ட கடன் விண்ணப்பங்களைப் பரிசீலனைசெய்வதற்கு அரசாங்கம்
கட்டுப்பாட்டுச் சபையொன்றையும் தாபித்தது. மேற்;படி கட்டுப்பாட்டுச் சபை விவசாயப்
பணிப்பாளரையும் கூட்டுறவுச் சங்கங்களின் முடிக்குரிய குடியேற்றத் திட்டங்களின்
பொருளாளரையும் மேல் மாகாண அரசாங்க அதிபரையும் பதிவாளரையும் மத்திய மாகாணத்திற்குப்
பொறுப்பாயிருந்த அரசாங்க அதிபரையும் கொண்டிருந்தது.